தஸ்தாயெவ்ஸ்கியின் கிறுஸ்து




கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் அல்யோஷா.தி இடியட் நாவலில் வரும் மிஸ்கின்.
அல்யோஷாவின் தந்தை கொலை செய்யப்படுகிறார்.மூத்த சகோதரன் திமித்ரி தன்டனை பெறுகிறான்.அடுத்த சகோதரன் இவான் மனநிலை பாதிக்கப்படுகிறான்.கேத்ரீனா நிரந்திற குற்றவுணர்வுக்கு ஆளாகிறாள்.சிறுவன் இல்யூஷா இறந்துபோகிறான்.அல்யோஷாவால் ஏதுவும் நிகழாமல் தடுக்கவோ, அல்லது நிகழ்த்தவோ முடியவில்லை.ஆனால் அவன் முன் அனைவரையும் தங்களை அம்மனமாக்கி கொள்கின்றனர்.ராத்திகனிடம் அல்யோஷாவை எப்படியாவது அழைத்துவர சொல்லும் குருஷன்கா அவன் வந்தபின் கிட்டத்தட்ட அவனிடம் சரனாகதி என்பது போல ஆகிறாள்.அவன் மானுட அறத்தின் குறியீடு போல இருக்கிறான்.லெளகீகமாக அவன் ஒரு செல்லாக் காசு.இவானால் அல்யோஷாவின் இருப்பை பொறுத்துக்கொள்ள முடிவதேயில்லை.திமித்ரி சிறையில் அல்யோஷாவிடம் பேசும்போது வாழ்க்கை எல்லா இடங்களிலும் வாழ்க்கையே.அங்கும் என்னை சுற்றி மனிதர்கள் இருப்பார்கள் என்கிறான்.அவனது தந்தை திமித்ரியை விடவும் இவானை கண்டே தான் அஞ்சுவதாக கூறுகிறார்.ஆனால் அவன் அவர்களுக்காக ஆறுதலாகவோ, லெளகீகமான சில யோசனைகளையோ கூற முடியவதில்லை.மாறாக அவன் தோளில் சாய்ந்து எல்லோரும் மனம் உருகி அழுகிறார்கள்.மானுடர்கள் எல்லோரும் தங்கள் கீழ்மையையும், தீமையும் அவன் முன் திறந்து வைத்து அவன் முன்னால் மானுட மேண்மையை நோக்கி முன் செல்கிறார்கள்.அவனே தஸ்தாவெய்ஸ்கியின் கிறுஸ்து.


தரிசனம்.





வித்யாசமான நாடகங்கள்.சில மேலை நாடுகளின் கலாச்சார மையத்தின் உதவியால், சில கார்ப்பரேட் நிறுவனங்களின் அறக்கட்டளைகள் மூலமாக என்று எப்படிஎப்படியோ நாடகங்கள் நிறைய நடக்கின்றன சென்னையில்.வித்யாசமான திரைப்படங்கள்.கார்ப்பரேட்கள் தயாரிக்கின்றன.
பல பதிப்பகங்கள் தீவிர இலக்கிய , தத்துவ , பண்பாட்டு புத்தகங்களை வெளியீடுகின்றன, வெளியீடுபவர் பிரபல அதிகாரிகள், அமைச்சர்கள்.எல்லாம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.

சுற்றுச்சுழல் ஆர்வலர்: உங்களால் சுற்றுச்சுழல் பாதிப்படைந்துவிட்டது.

கார்ப்பரேட்:ஆம், நம்மால் சுற்றுச்சுழல் பாதிப்படைந்துவிட்டது.

சுற்றுச்சுழல் ஆர்வலர்: ஆனால் உங்களால்.

கார்ப்பரேட்: ஆம், நம்மால்.

சுற்றுச்சுழல் ஆர்வலர்:!!!!!

கார்ப்பரேட்:சுற்றுச்சுழலை பாதுக்காக்க நூறு மரக்கன்றுகளை நடவிருக்கிறோம்.நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.

சுற்றுச்சுழல் ஆர்வலர்:!!!!!

கார்ப்பரேட்: சுற்றுச்சழலை பாதுகாப்போம்.

சுற்றுச்சுழல் ஆர்வலர்:!!!!!

கார்ப்பரேட்: சுற்றுச்சழலை பாதுக்காப்போம்.சொல்லுங்கள்.....

சுற்றுச்சுழல் ஆர்வலர்:சுற்றுச்சழலை பாதுக்காப்போம்.!!!!

நாடகங்கள் இயக்குவோரின்,நடிப்போரின், மாற்று திரைப்படங்களை இயக்குவோரின் , பல இலக்கியவாதிகளின் , பதிப்பாளர்களின் தரிசனம் என்ன.மாசனோபு, காந்தி , லாரி பேக்கர் இவர்களின் வாழ்க்கையை பார்க்கும் போது ஒரு விஷயம் தெரிகிறது.மாசனோபு நூறு சதவிகித மக்களும் விவசாயம் செய்யலாமே , ஏன் வேறு விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள் என கருதுகிறார்.காந்தியின் கிராம ராஜ்யம் கனவுதான் அவரை இறுதிவரை பயணம் செய்ய வைத்திருக்கிறது.லாரி பேக்கரிடம் எளிமையாக எதையும் செய்ய முடியும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது.அவர்களின் கனவுகள் அவர்களை வழிநடத்தியிருக்கிறது.இதில் ஒன்றை கவனிக்கலாம்.இவற்றில் குழந்தையின் அறியாமை இருக்கிறது.லாப நஷ்ட கணக்கு பார்க்காத குழந்தையின் அறியாமை.ஜம்பது வருடங்களாக மாசனோபு தொடர்ந்து இயற்கை விவசாய முறையை செய்திருக்கிறார்.சலிக்கவேயில்லை.லாரி பேக்கரிடம் அதையையே நாம் பார்க்கிறோம்.காந்தியிடமும்.அதுவே அவர்களை வழிநடத்தியிருக்கிறது.அந்த கனவு.மானுட தரிசனம்.அது இன்று யாரிடம் இருக்கிறது.எந்த இலக்கியவாதியிடம் இருக்கிறது.எந்த தலைவனிடம் இருக்கிறது.

உலக சந்தையில் ஒரு மனிதன் போனால் இன்னொருவன்.
உனக்கென்ன ஒரு லாப நஷ்ட கணக்கிருந்தால் விஷயம் வேறு.
-நகுலன்.




காந்தியின் கைகளில் ரத்தம் இல்லை





எல்லா புனித நூல்களின் ஏடுகளிலும் ரத்தம்.மார்க்ஸின் கைகளில் ரத்தம்.மனித ரத்தம்.நான் என் துணிகளை துவைத்துகொள்வதில்லை.வெளியில் நல்ல மழை.கவலையில்லை.மேலே கூரை இருக்கிறது.குளிர்.நல்ல கனமான உடைகள் இருக்கிறது.வாஷிங் மேஷினின் சத்தம் தொந்தரவு தருகிறது.அக்குள் முடி சிராய்பதற்கு பார்பர் ஷாப் செல்ல வேண்டும்.தட்டச்சு செய்ய சிறந்த மடிக்கணினி.மழையால் மின்சாரம் போய்விட்டால் கவலைவேண்டாம்.இன்வர்ட்டர் இருக்கிறது.செளகரியமாக இருக்கிறேன்.எதற்கும் கவலையில்லை.நான் காந்தியையும் விமர்சனம் செய்வதில்லை.ஆனால் நான் கண்டுகொண்டேன்.காந்தியின் கைகளில் ரத்தம் இல்லை.