தரிசனம்.





வித்யாசமான நாடகங்கள்.சில மேலை நாடுகளின் கலாச்சார மையத்தின் உதவியால், சில கார்ப்பரேட் நிறுவனங்களின் அறக்கட்டளைகள் மூலமாக என்று எப்படிஎப்படியோ நாடகங்கள் நிறைய நடக்கின்றன சென்னையில்.வித்யாசமான திரைப்படங்கள்.கார்ப்பரேட்கள் தயாரிக்கின்றன.
பல பதிப்பகங்கள் தீவிர இலக்கிய , தத்துவ , பண்பாட்டு புத்தகங்களை வெளியீடுகின்றன, வெளியீடுபவர் பிரபல அதிகாரிகள், அமைச்சர்கள்.எல்லாம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.

சுற்றுச்சுழல் ஆர்வலர்: உங்களால் சுற்றுச்சுழல் பாதிப்படைந்துவிட்டது.

கார்ப்பரேட்:ஆம், நம்மால் சுற்றுச்சுழல் பாதிப்படைந்துவிட்டது.

சுற்றுச்சுழல் ஆர்வலர்: ஆனால் உங்களால்.

கார்ப்பரேட்: ஆம், நம்மால்.

சுற்றுச்சுழல் ஆர்வலர்:!!!!!

கார்ப்பரேட்:சுற்றுச்சுழலை பாதுக்காக்க நூறு மரக்கன்றுகளை நடவிருக்கிறோம்.நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.

சுற்றுச்சுழல் ஆர்வலர்:!!!!!

கார்ப்பரேட்: சுற்றுச்சழலை பாதுகாப்போம்.

சுற்றுச்சுழல் ஆர்வலர்:!!!!!

கார்ப்பரேட்: சுற்றுச்சழலை பாதுக்காப்போம்.சொல்லுங்கள்.....

சுற்றுச்சுழல் ஆர்வலர்:சுற்றுச்சழலை பாதுக்காப்போம்.!!!!

நாடகங்கள் இயக்குவோரின்,நடிப்போரின், மாற்று திரைப்படங்களை இயக்குவோரின் , பல இலக்கியவாதிகளின் , பதிப்பாளர்களின் தரிசனம் என்ன.மாசனோபு, காந்தி , லாரி பேக்கர் இவர்களின் வாழ்க்கையை பார்க்கும் போது ஒரு விஷயம் தெரிகிறது.மாசனோபு நூறு சதவிகித மக்களும் விவசாயம் செய்யலாமே , ஏன் வேறு விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள் என கருதுகிறார்.காந்தியின் கிராம ராஜ்யம் கனவுதான் அவரை இறுதிவரை பயணம் செய்ய வைத்திருக்கிறது.லாரி பேக்கரிடம் எளிமையாக எதையும் செய்ய முடியும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது.அவர்களின் கனவுகள் அவர்களை வழிநடத்தியிருக்கிறது.இதில் ஒன்றை கவனிக்கலாம்.இவற்றில் குழந்தையின் அறியாமை இருக்கிறது.லாப நஷ்ட கணக்கு பார்க்காத குழந்தையின் அறியாமை.ஜம்பது வருடங்களாக மாசனோபு தொடர்ந்து இயற்கை விவசாய முறையை செய்திருக்கிறார்.சலிக்கவேயில்லை.லாரி பேக்கரிடம் அதையையே நாம் பார்க்கிறோம்.காந்தியிடமும்.அதுவே அவர்களை வழிநடத்தியிருக்கிறது.அந்த கனவு.மானுட தரிசனம்.அது இன்று யாரிடம் இருக்கிறது.எந்த இலக்கியவாதியிடம் இருக்கிறது.எந்த தலைவனிடம் இருக்கிறது.

உலக சந்தையில் ஒரு மனிதன் போனால் இன்னொருவன்.
உனக்கென்ன ஒரு லாப நஷ்ட கணக்கிருந்தால் விஷயம் வேறு.
-நகுலன்.




No comments: