கச்சாப்பொருள்




கச்சாப்பொருள்

காந்தி மிக எளிமையாக வாழ்ந்தார்
காந்தி எல்லாவற்றையும் பரிசோதனைக்கு உட்படுத்தினார்
காந்தி தன் வேலைகளை தானே செய்துகொண்டார்
காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார்.
காந்தியின் சிந்தனைகள் காந்தியம் என்றழைக்கப்பட்டது
காந்தியம் சந்தையில் நன்றாக விற்கிறது.
காந்தியம் விலையுர்ந்த கச்சாப்பொருள்.





கருணை

மார்கஸ் கைகளில் ரத்தம் - மனித ரத்தம்
புனித ஏடுகளின் இலைகளில் ரத்தம்
நான் ரத்தம் குடித்துகொண்டிருந்த
பிசுபிசுப்பான இரவின் இருட்டொன்றில்
ஷெனாய் கசிந்துகொன்டிருந்தது.







2 comments:

rvelkannan said...

உங்களின் பக்கம் வந்தேன். அனைத்தையும் படித்தேன். வாழ்த்துகள்.
//காந்தியம் விலையுர்ந்த கச்சாப்பொருள்// வெட்கபடுவதா வேதனைபடுவதா நண்பரே
//மார்கஸ் கைகளில் ரத்தம் - மனித ரத்தம்
புனித ஏடுகளின் இலைகளில் ரத்தம்//
முகத்தில் அறைகிறது.

சர்வோத்தமன் சடகோபன் said...

வேல் கண்ணன், வாசித்ததற்கு மிக்க நன்றி..