வாழ்வும் வசந்தமும்







நமது தமிழ் சினிமாக்களில் எப்போதும் ஆண்கள் பெண்களை துரத்துகிறார்கள்.மன்றாடி காலில் விழுந்து காதலை திரும்ப பெறுகிறார்கள்.ஆனால் நிஜ உலகில் எல்லாம் தலைகீழாக இருப்பதாக தோன்றுகிறது.பெண்களிடம் ஆண்கள் காதலை தெரிவிக்கிறார்கள்.பெண்ணுக்கும் பிடித்திருந்தால் ஏதோ ஒரு கட்டத்தில் ஒப்புக்கொள்கிறாள்.

ஆனால் அதன்பின் அந்த ஆண் அந்தப் பெண்ணிடமிருந்து ஓட அந்தப் பெண் ஆணை துரத்துகிறாள்.காதலிப்பதை விட என்னுடன் பேசிக்கொண்டிருப்பதை விட ஒன்றாக உணவு அருந்துவதை விட இவனுக்கு வேறு என்ன வேலை என்று பெண்ணுக்கு புரிவதில்லை.ஏன் இந்தப் பெண்ணை காதலித்தோம் என்று ஆணுக்கும் புரிவதில்லை.

இப்படியான கசப்புகளில் சென்று சேரும் நிலையில் பெண் சினம் கொள்கிறாள்.பெண் காத்திருப்பதை நினைத்து சலித்து உறவை முறிக்கிறாள்.ஒரு வகையில் தப்பித்துவிட்டோம் இன்னொரு வகையில் தொலைத்துவிட்டோம் என்றும் ஆண் புலம்புகிறான்.ஆண் நண்ணீரில் புகலிடம் தேடுகிறான்.பெண் மனச்சோர்வு கொள்கிறாள்.

பெண்களுக்கு திருமணம் குறித்து இருக்கும் கனவுகளை தமிழ் சினிமா இனிதான் எடுக்க வேண்டும்.ஆண்களை விட பெண்கள்தான் காதலிக்க அதிகம் விரும்புகிறார்கள்,ஏங்குகிறார்கள்.இன்றைய இந்திய பெண்ணும் தன் மீது அதிகாரம் செலுத்தும் ஆணைத்தான் தேர்வு செய்ய விரும்பிகிறாள்.சமத்துவத்தை பேணுபவனாக பாவனை செய்தால் போதுமானதாக இருக்கிறது.

இன்றைய ஆண்கள் குழப்பத்துடன் காதலிக்கிறார்கள் ,குழப்பத்துடன் திருமணம் செய்து கொள்கிறார்கள்.பெண்களுக்கு அவனைப் பிடித்திருந்தால் அவர்கள் அதிகம் குழம்புவதில்லை,அலட்டிக் கொள்வதில்லை.இன்றைய ஆண் பெண்ணுடன் நிறைய பேசி இனி என்ன பேசுவது என்று சலிப்படைகிறான்.அவனுக்கு அவளைப் பற்றி அறிந்து கொள்ள பரவசமடைய ஒன்றுமில்லை.

முப்பது வயது வரை ஆண்களுக்கு தங்களை விட வயதில் மூத்த பெண்னை பிடிக்கிறது.நாற்பதுகளில் தன்னை விட வயது குறைவான பெண்ணின் மீது ஈர்ப்பு துவங்குகிறது.நாற்பதுகளில் தன் எதிரில் அழகான இளம் நங்கை வந்து அமரும் போது உறங்கத் துவங்குகையில் அவன் சுந்தர ராமசாமியின் வாழ்வும் வசந்தமும் கதையில் வருவது போல ஞானியும் ஆகிறான்.

Photo Courtesy : https://niakd.deviantart.com/art/spring-love-118361140


No comments: